14 “ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலும், உங்களிடம் விற்கப்பட்ட உங்கள் சகோதரர்களாகிய எபிரெயர்களை நீங்கள் விடுதலை செய்ய வேண்டும். உங்களிடம் ஆறு வருஷங்களாக வேலை செய்த அடிமைகளை அனுப்பிவிட வேண்டும்”+ என்று சொன்னேன். உங்கள் முன்னோர்கள் நான் சொன்னதைக் காதில் வாங்கவே இல்லை.