26 அதற்குப் பதிலாக, தீர்க்கதரிசியாகிய எரேமியாவையும் செயலாளராகிய பாருக்கையும் கைது செய்யச் சொல்லி தன்னுடைய மகன் யெர்மெயேலிடமும், அசரியேலின் மகன் செராயாவிடமும், அப்தெயேலின் மகன் செலேமியாவிடமும் கட்டளை கொடுத்தார். ஆனால், அவர்களிடம் சிக்கிக்கொள்ளாதபடி எரேமியாவையும் பாருக்கையும் யெகோவா பாதுகாத்தார்.+