17 அப்போது எரேமியா சிதேக்கியாவிடம், “பரலோகப் படைகளின் கடவுளும் இஸ்ரவேலின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘நீ பாபிலோன் ராஜாவுடைய அதிகாரிகளிடம் சரணடைந்தால் உயிர்பிழைப்பாய். இந்த நகரமும் தீ வைத்துக் கொளுத்தப்படாது. நீயும் உன் குடும்பத்தாரும் தப்பித்துக்கொள்வீர்கள்.+