41 எலிஷாமாவின் பேரனும் நெத்தனியாவின் மகனுமான இஸ்மவேல்+ ராஜ வம்சத்தைச் சேர்ந்தவன், ராஜாவின் முக்கிய அதிகாரிகளில் ஒருவன். ஏழாம் மாதத்தில் அவன் மிஸ்பாவில்+ இருக்கிற அகிக்காமின் மகனான கெதலியாவிடம் பத்து ஆட்களைக் கூட்டிக்கொண்டு வந்தான். பின்பு, மிஸ்பாவில் அவர்கள் எல்லாரும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.