9 அதற்கு அவர், “இஸ்ரவேல் ஜனங்களும் யூதா வம்சத்தாரும் மகா பெரிய அக்கிரமங்களைச் செய்திருக்கிறார்கள்.+ தேசமெங்கும் இரத்தம் ஓடுகிறது,+ எல்லா இடங்களிலும் ஊழல் நடக்கிறது.+ அவர்கள் எல்லாரும், ‘யெகோவா இந்தத் தேசத்தைக் கைவிட்டுவிட்டார், யெகோவா நம்மைப் பார்ப்பதில்லை’+ என்று சொல்லிக்கொள்கிறார்கள்.