2 “மனிதகுமாரனே, எகிப்தின் ராஜாவான பார்வோனைப் பற்றி இந்தப் புலம்பல் பாட்டைப் பாடு:
‘நீ தேசங்களின் நடுவில் பலமான இளம் சிங்கத்தைப் போல இருந்தாய்.
ஆனால், அடக்கி ஒடுக்கப்பட்டாய்.
ராட்சதக் கடல் பிராணியைப் போல+ உன் ஆறுகளில் துடிப்போடு திரிந்தாய்.
கால்களால் சேற்றைக் கிளறி, ஆறுகளை அசுத்தமாக்கினாய்.’