30 முதல் விளைச்சலில் மிகச் சிறந்ததும், நீங்கள் காணிக்கையாகக் கொடுக்கிற எல்லா பொருள்களும் குருமார்களுக்குத்தான் போய்ச் சேரும்.+ உங்களுடைய முதல் விளைச்சலின் முதல் மாவை குருமார்களுக்குக் கொடுக்க வேண்டும்.+ அதனால், உங்கள் குடும்பத்தாருக்கு ஆசீர்வாதம் கிடைக்கும்.+