10 பெர்சிய ராஜா கோரேஸ்+ ஆட்சி செய்த மூன்றாம் வருஷத்தில், ஒரு பெரிய போரைப் பற்றிய செய்தி பெல்தெஷாத்சார்+ என்று அழைக்கப்பட்ட தானியேலுக்கு வெளிப்படுத்தப்பட்டது. அந்தச் செய்தி உண்மையானது. அதை தானியேல் புரிந்துகொண்டார்; அவர் பார்த்த விஷயங்கள் அவருக்குப் புரிய வைக்கப்பட்டன.