8 கிமா நட்சத்திரக் கூட்டத்தையும் கீஸில் நட்சத்திரக் கூட்டத்தையும் உருவாக்கியவர்+ நான்தான்.
கும்மிருட்டைப் பகலாக மாற்றுபவர் நான்தான்.
பகலை இரவாக மாற்றுபவர்+ நான்தான்.
கடல்நீரை அள்ளி எடுப்பவர் நான்தான்.
பூமிமேல் அதைப் பொழிய வைப்பவர்+ நான்தான்.
யெகோவா என்பது என்னுடைய பெயர்.