10 பெத்தேலின் ஆலய குருவான அமத்சியா,+ இஸ்ரவேலின் ராஜாவாகிய யெரொபெயாமுக்கு+ இந்தச் செய்தியை அனுப்பினார்: “ஆமோஸ் இஸ்ரவேலின் நடுவில் இருந்துகொண்டே உங்களுக்கு எதிராகச் சதித்திட்டம் தீட்டிக்கொண்டிருக்கிறான்.+ அவன் சொல்வதை ஜனங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.+