1 ஒபதியா பார்த்த தரிசனம்.
ஏதோமைப்+ பற்றி உன்னதப் பேரரசராகிய யெகோவா சொன்னதை ஒபதியா இப்படி விவரித்தார்:
“யெகோவாவிடமிருந்து நமக்கு ஒரு செய்தி வந்திருக்கிறது.
எல்லா தேசங்களுக்கும் அதைச் சொல்ல ஒரு தூதுவர் அனுப்பப்பட்டிருக்கிறார்.
‘தயாராகுங்கள், ஏதோமுக்கு எதிராகப் போர் செய்யப் புறப்படுவோம்!’+ என்று அந்தத் தூதுவர் அறிவிக்கிறார்.”