25 நீங்கள் அந்தத் தீர்க்கதரிசிகளுக்கும் உங்கள் முன்னோர்களோடு கடவுள் செய்த ஒப்பந்தத்துக்கும் வாரிசுகளாக இருக்கிறீர்கள்;+ அந்த ஒப்பந்தத்தின்படி, ‘உன்னுடைய சந்ததியின் மூலம் பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் ஆசீர்வதிக்கப்படும்’+ என்று ஆபிரகாமிடம் கடவுள் சொன்னார்.