5 ஆனால் யூதர்கள் பொறாமைப்பட்டு,+ சந்தையில் வெட்டியாகத் திரிந்துகொண்டிருந்த மோசமான ஆட்கள் சிலரைக் கும்பலாகச் சேர்த்துக்கொண்டு நகரத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்தார்கள். பின்பு, பவுலையும் சீலாவையும் அந்தக் கும்பலிடம் இழுத்து வருவதற்காக யாசோன் என்பவருடைய வீட்டைத் தாக்கி உள்ளே புகுந்தார்கள்.