9 கொல்லப்படுவதற்காக அரங்கில் கடைசியாக நிறுத்தப்படுகிற ஆட்களைப் போல் ஆகும்படி அப்போஸ்தலர்களாகிய எங்களைக் கடவுள் செய்துவிட்டார்+ என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால், இந்த உலகத்துக்கும் தேவதூதர்களுக்கும் மனிதர்களுக்கும் நாங்கள் காட்சிப்பொருளாக ஆகியிருக்கிறோம்.+