4 விசுவாசத்தால்தான் ஆபேல், காயீனுடைய பலியைவிட உயர்ந்த பலியைக் கடவுளுக்குக் கொடுத்தார்.+ அதனால் அவர் நீதிமான் என்று நற்சாட்சி பெற்றார். அவருடைய காணிக்கைகளைக் கடவுள் ஏற்றுக்கொண்டாரே.+ அவர் இறந்துபோனாலும் தன்னுடைய விசுவாசத்தால் இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறார்.+