16 அந்த எல்லை பென்-இன்னோம் பள்ளத்தாக்கைப்+ பார்த்தபடி இருக்கிற மலையின் அடிவாரத்துக்குப் போனது. அதாவது, ரெப்பாயீம்+ பள்ளத்தாக்கின் வடக்கில் இருக்கிற மலையின் அடிவாரம்வரை போனது. அங்கிருந்து இன்னோம் பள்ளத்தாக்குவரை, தெற்கே எபூசியர்களின்+ மலைச் சரிவுவரை, அந்த எல்லை போய் என்-ரொகேலுக்கு+ இறங்கியது.