19 அதற்கு அவர்கள், “சத்தம் போடாதே! பேசாமல் எங்களுடன் வந்து எங்களுக்கு ஆலோசகனாகவும் குருவாகவும் இரு. ஒரேவொரு மனுஷனுடைய வீட்டில் பூசாரியாக இருப்பது+ நல்லதா, இஸ்ரவேல் குடும்பங்களுக்கே, சொல்லப்போனால் ஒரு கோத்திரத்துக்கே, பூசாரியாக இருப்பது+ நல்லதா? நீயே யோசித்துக்கொள்” என்று சொன்னார்கள்.