28 அவர்களைக் காப்பாற்ற யாரும் வரவில்லை. ஏனென்றால், அந்த நகரம் சீதோனிலிருந்து ரொம்பத் தூரத்தில் இருந்தது. அதோடு, அவர்கள் யாரோடும் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்துவந்தார்கள். அந்த நகரம் பெத்-ரேகோபைச்+ சேர்ந்த சமவெளியில் இருந்தது. தாண் கோத்திரத்தார் அதைத் திரும்பவும் கட்டி அதில் குடியேறினார்கள்.