அடிக்குறிப்பு
a 1844-ல், ஆங்கிலேய மதகுரு இ. பி. எலியட், 1914 தானியேல் 4-ம் அதிகாரத்தில் உள்ள ‘ஏழு காலங்களின்’ முடிவடையும் தேதியாக இருக்கக்கூடும் என்று அதன் பேரில் கவனத்தை ஈர்த்தார். 1849-ல், இலண்டனைச் சேர்ந்த ராபர்ட் சீலி இதேவிதமாக இவ்விஷயத்தைப் பற்றி குறிப்பிட்டார். ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த ஜோசப் சைஸ் சுமார் 1870-ல் பதிப்பான ஒரு பிரசுரத்தில் பைபிள் கால அட்டவணையில் 1914 ஒரு முக்கிய தேதி என சுட்டிக்காட்டினார். 1875-ல் நெல்சன் H. பார்பர், காலையின் தூதன் (Herald of the Morning) என்ற தன் பத்திரிகையில் 1914-ஐ இயேசு “புறஜாதியாரின் காலம்” என்றழைத்த காலப்பகுதியின் முடிவை குறிப்பிடுவதாக எழுதினார்.—லூக்கா 21:24.