அடிக்குறிப்பு
a “முன்னொரு சமயம் இரத்தமேற்றுதலால், கர்ப்பம் தரித்ததால், அல்லது உறுப்பு மாற்று சிகிச்சையால் அலர்ஜிக்குள்ளான நோயாளிக்கு . . . இரத்தமேற்றுதலின் தாமத எதிர்விளைவான சிவப்பணு சிதைவு” ஏற்படலாம் என டாக்டர் டனிஸ் எம். ஹார்மனிங் எழுதிய நவீன இரத்த சேமிப்பு மற்றும் இரத்தமேற்றுதல் பழக்கங்கள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் குறிப்பிடுகிறது. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், இரத்தமேற்றுதலால் நோயாளியின் உடலில் விபரீத விளைவை ஏற்படுத்தும் ஆன்ட்டிபாடீஸை, “இரத்தமேற்றுதலுக்கு முன்பு செய்யப்படும் முறைப்படியான சோதனைகளில் கண்டுபிடிக்க முடியாது.” டெய்லீஸ் நோட்ஸ் ஆன் ப்ளட் சொல்கிறபடி, “பொருந்தாத . . . இரத்தத்தை மிகக் குறைவாக ஏற்றினால்கூட [சிவப்பணு சிதைவு] ஏற்படலாம். சிறுநீரகம் செயலிழக்கும்போது நோயாளியின் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சு சேர்ந்து விடுகிறது. ஏனென்றால் இரத்தத்திலுள்ள கழிவுப் பொருட்களை சிறுநீரகங்களால் அகற்ற முடிவதில்லை.”