அடிக்குறிப்பு
a அராமிக் மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட “hour” (மணிநேரம்) என்ற ஆங்கில சொல், கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) பைபிளில், தானியேல் 3:6, 15; 4:19, 33; 5:5 ஆகிய இடங்களில் காணப்படுகிறது; எனினும், ஸ்டிராங்ஸ் சொல் ஒப்பீட்டாராய்ச்சி என்ற ஆங்கில நூலும் எபிரெய மற்றும் கல்தேய மொழியின் ஆங்கில அகராதியும் மணிநேரம் என்ற சொல்லின் பொருள் “ஒரு பார்வை, அதாவது, ஒரு கணநேரம்” என குறிப்பிடுகிறது. பரிசுத்த வேதாகமத்தின் புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளில் இது “கணநேரம்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.