அடிக்குறிப்பு
b சீஷராக்கும் வேலையை இயேசு தொடர்ந்து கண்காணித்து வருகிறார். (வெளிப்படுத்துதல் 14:14-16) இன்று, கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும் இயேசுவை சபையின் தலைவராக கருதுகின்றனர். (1 கொரிந்தியர் 11:3) கடவுளுடைய உரிய நேரத்தில், இன்னொரு விதத்தில் “தலைவராகவும் அதிபதியாகவும்” இயேசு செயல்படுவார். அதாவது, அர்மகெதோன் யுத்தத்தில் கடவுளுடைய எதிரிகளோடு முடிவாக போர் செய்யும்போது இது நிறைவேறும்.—வெளிப்படுத்துதல் 19:19-21.