அடிக்குறிப்பு
a உதாரணத்திற்கு, கடவுளுடைய முகம், கண்கள், காதுகள், மூச்சுக்காற்று, வாய், கைகள், பாதம் ஆகியவற்றை பற்றி பைபிள் குறிப்பிடுகிறது. (சங்கீதம் 18:15; 27:8, அடிக்குறிப்பு; 44:3; ஏசாயா 60:13; மத்தேயு 4:4; 1 பேதுரு 3:12) இவை அடையாளப்பூர்வ பதங்கள். யெகோவா “கற்பாறை,” அல்லது ‘கேடயம்’ என சொல்லப்படுவதை எவ்வாறு சொல்லர்த்தமாக எடுக்க முடியாதோ அப்படித்தான் அவற்றையும் சொல்லர்த்தமாக எடுக்க முடியாது.—உபாகமம் 32:4; சங்கீதம் 84:11.