அடிக்குறிப்பு
c இதற்கு இரண்டு உதாரணங்களை சாமுவேல் புத்தகத்தின் பதிவு குறிப்பிடுகிறது. முதலாவதாக, பலிக்குரிய மிருகங்களில் எந்தெந்த பாகங்களைக் குருமார்கள் சாப்பிடலாம் எனத் திருச்சட்டம் திட்டவட்டமாகச் சொன்னபோதிலும், இந்தப் பொல்லாத குருமார்கள் ஏறுக்குமாறாக நடந்தார்கள். (உபா. 18:3) இறைச்சி வெந்துகொண்டிருக்கிற பாத்திரத்தில் ஒரு பெரிய முள்கரண்டியைவிட்டு நல்ல நல்ல துண்டுகளை எடுத்துவரும்படி பணியாட்களிடம் சொன்னார்கள்! இரண்டாவதாக, யெகோவாவுக்குச் செலுத்தப்பட வேண்டிய கொழுப்பைத் தகனிப்பதற்கு முன்பே பணியாட்களிடம் சொல்லி மக்களிடமிருந்து இறைச்சியை மிரட்டி வாங்கினார்கள்.—லேவி. 3:3-5; 1 சா. 2:13-17.