அடிக்குறிப்பு
b இங்கே சொல்லப்படுகிற “சாந்தமான, மெல்லிய குரல்” ஒரு தேவதூதனுடைய குரலாக இருந்திருக்கலாம்; 1 இராஜாக்கள் 19:9-ல் (NW) உள்ள ‘யெகோவாவின் வார்த்தையை’ தெரிவித்தவரும் இவராகவே இருந்திருக்கலாம். 15-வது (NW) வசனம் இந்தத் தூதரை “யெகோவா” என்று குறிப்பிடுகிறது. வனாந்தரத்தில் இஸ்ரவேலரை வழிநடத்துவதற்காக யெகோவா ஒரு தேவதூதரைப் பயன்படுத்தினார் என்று நமக்குத் தெரியும்; “என் பெயரை அவர் தாங்கியிருக்கிறார்” என்று அவரைக் குறித்து கடவுள் சொன்னார். (யாத். 23:21, NW) அந்தத் தேவதூதனும் இந்தத் தேவதூதனும் ஒன்றுதான் என்று நாம் அடித்துச்சொல்ல முடியாது. என்றாலும், இயேசு பூமிக்கு வருவதற்குமுன் யெகோவாவுடைய ‘வார்த்தையாக,’ அதாவது அவருடைய ஊழியர்களிடம் பேசும் விசேஷப் பிரதிநிதியாக, இருந்தார் என்பதை நாம் மனதில் வைக்கலாம்.—யோவா. 1:1.