அடிக்குறிப்பு
a ‘உலகம் உண்டானது’ என்பதற்கான கிரேக்க சொற்றொடர் விதைகளைத் தூவுவதை அர்த்தப்படுத்துகிறது, இது இனப்பெருக்கத்தைக் குறிக்கிறது. அப்படியானால், முதன்முதலில் பிறந்த மனிதனை அந்தச் சொற்றொடர் சுட்டிக்காட்டுகிறது. ஆனால், “உலகம் உண்டான” சமயத்தைப் பற்றி இயேசு குறிப்பிட்டபோது முதன்முதலில் பிறந்த காயீனைப் பற்றிச் சொல்லாமல் ஏன் ஆபேலைப் பற்றிச் சொன்னார்? காயீன் எடுத்த தீர்மானங்களும் செய்த செயல்களும், அவன் வேண்டுமென்றே யெகோவா தேவனுக்கு விரோதமாய்க் கலகம் செய்ததைக் காட்டின. ஆகையால், காயீனும் அவனுடைய பெற்றோரைப் போலவே மீட்கப்பட மாட்டான், ஆம், உயிர்த்தெழுப்பப்பட மாட்டான்.