அடிக்குறிப்பு
b லாமேக்கு தன்னுடைய மகனுக்கு நோவா என்ற பெயரைச் சூட்டினார்; அதன் அர்த்தம் “இளைப்பாறுதல்” அல்லது “ஆறுதல்” என்பதாக இருக்கலாம். சபிக்கப்பட்ட இந்த மண்ணில் கஷ்டப்பட்டு உழைத்துக் களைத்திருக்கிற மனிதரை இளைப்பாறுதலுக்கு நோவா வழிநடத்திச் செல்வார் என லாமேக்கு தீர்க்கதரிசனம் உரைத்திருந்தார்; இப்படி நோவா தன் பெயருக்கு இசைவாக வாழ்வார் என்றும் முன்னுரைத்திருந்தார். (ஆதி. 5:28, 29) ஆனால், அந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைக் காணும் முன்பே அவர் இறந்துவிட்டார். நோவாவின் தாயும் சகோதரர்களும் சகோதரிகளும் பெருவெள்ளத்தில் அழிந்திருக்கலாம்.