அடிக்குறிப்பு
a அதிகாரத்தைப் பற்றிய விஷயத்தில், மருத்துவமனையில் வேலைசெய்யும் கிறிஸ்தவர்கள் சிலர் கவனமாய் இருக்க வேண்டியிருந்திருக்கிறது. ஒரு நோயாளிக்கு மருந்தை கொடுக்கும்படி அல்லது மருத்துவ நடைமுறைகளை பின்பற்றும்படி கட்டளையிட ஒரு டாக்டருக்கு அதிகாரம் இருக்கலாம். நோயாளி மறுக்காவிட்டாலும், அதிகாரத்திலுள்ள கிறிஸ்தவ டாக்டர், இவற்றின்பேரில் பைபிள் சொல்வதை அறிந்தும், இரத்தமேற்றுதலை அல்லது கருச்சிதைவை செய்யும்படி எவ்வாறு கட்டளையிட முடியும்? மாறாக, அந்த ஆஸ்பத்திரியில் வேலை செய்யும் ஒரு நர்ஸுக்கு அத்தகைய அதிகாரம் ஒருவேளை இராது. அந்த நர்ஸின் அன்றாட வேலையில் ஏதோ நோக்கத்தோடு ஓர் இரத்த பரிசோதனை செய்யும்படி அவர்களுக்குக் கட்டளையிடலாம் அல்லது கருச்சிதைவுக்கு வந்த ஒருவரை கவனிக்கும்படி டாக்டர் சொல்லலாம். 2 இராஜாக்கள் 5:17-19-ல் பதிவுசெய்யப்பட்டுள்ளதற்கு ஒத்த விதமாக, இரத்தமேற்றவும் கருச்சிதைவு செய்யவும் கட்டளையிடுகிற அதிகாரம் தனக்கு இல்லாததால், ஒரு நோயாளிக்கு சாதாரண சேவைகளைத் தான் செய்வதாக அவர்கள் முடிவுசெய்யலாம். எனினும், ‘நல்மனச்சாட்சியோடே தேவனுக்குமுன்பாக நடப்பதற்கு’ நிச்சயமாகவே தன் மனச்சாட்சிக்கு அவர்கள் இன்னும் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது.—அப்போஸ்தலர் 23:1.