அடிக்குறிப்பு
b இனவிருத்தி உறுப்புகள் சேதப்படுத்தப்பட்ட எவனும் தேவனுடைய சபைக்குள் வரக்கூடாது என்று சொல்லப்பட்ட சட்டம் இதற்கு தொடர்புடையதைப்போல் தோன்றலாம். (உபாகமம் 23:1) ஆனால், வேதாகமங்களின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) என்ற புத்தகத்தில், இந்தக் காரியம் “ஆண்புணர்ச்சி போன்ற ஒழுக்கக்கேடான செயல்களை செய்வதற்காக வேண்டுமென்றே காயடித்து வீரியமற்றதாக ஆக்குவதைக் குறிக்கிறது” என்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆகவே அந்தச் சட்டம் காயடிப்பதைப் பற்றியோ அல்லது கருத்தடைக்கு சமமான ஒன்றைப் பற்றியோ குறிப்பிடவில்லை. “அண்ணகர்களை தன்னுடைய ஊழியர்களாக ஏற்றுக்கொள்ளும் சமயத்தைப் பற்றி யெகோவா ஆறுதலளிக்கும் விதத்தில் முன்னுரைத்தார். அவர்கள் கீழ்ப்படிதலுடன் நடந்துகொண்டால் மகன்களுக்கும் மகள்களுக்கும் இருக்கும் பெயரைவிட சிறந்த பெயரைப் பெற்றுக்கொள்வார்கள். இயேசு கிறிஸ்து நியாயப்பிரமாணத்தை நீக்கியதால் எல்லோருமே, அவர்கள் முன்பு எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் சரி விசுவாசத்துடன் நடந்துகொண்டால் கடவுளுக்கு புத்திரராகும் வாய்ப்பு திறந்து வைக்கப்பட்டது. எல்லாவிதமான உடல் சம்பந்தமான வேறுபாடுகளும் நீக்கப்பட்டன” என்று உட்பார்வை தொடர்ந்து குறிப்பிடுகிறது.—ஏசா 56:4, 5; யோவா 1:12.”