அடிக்குறிப்பு
a “பெர்சியர்கள், மேதியர்கள், கல்தேயர்கள் மத்தியில் இந்த வானசாஸ்திரிகள் ஓர் ஆசாரிய வகுப்பாராக இருந்து ஆவியுலகத் தொடர்பு, ஜோதிடம், பில்லி சூனிய மருத்துவம் போன்றவற்றை வளர்த்தார்கள்” என ஜெர்மானிய நூல் (பரிசுத்த வேதாகமம்—வசனமும் விளக்கவுரையும், இயேசுவின் சங்கத்தைச் சேர்ந்த பேராசிரியர்களால் எழுதப்பட்ட நூல்) விளக்குகிறது. என்றாலும், இடைக் காலத்திற்குள், இளம் இயேசுவைப் பார்க்கச் சென்ற அந்த வானசாஸ்திரிகள் புனிதர்கள் என அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்; மெல்க்யார், காஸ்பார், பால்டாஸார் என்ற பெயர்களும் அவர்களுக்குச் சூட்டப்பட்டன. அவர்களுடைய எலும்புகள் ஜெர்மனியில் கோலாங்கிலுள்ள கத்தீட்ரலில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.