அடிக்குறிப்பு
a யோனா கலிலேயா பட்டணத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது; ஏனென்றால், இயேசுவைக் குறித்து பரிசேயர்கள் பேசுகையில், “கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும்” என்று வீராப்போடு சொன்னார்கள். (யோவான் 7:52) இந்தச் சாதாரண பட்டணமாகிய கலிலேயாவிலிருந்து எந்தத் தீர்க்கதரிசியும் வரவில்லை, வரப்போவதுமில்லை என பரிசேயர்கள் பொதுப்படையாகச் சொன்னதாக அநேக மொழிபெயர்ப்பாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் கருத்துத் தெரிவிக்கிறார்கள். அப்படியென்றால், அந்தப் பரிசேயர்கள் சரித்திரத்தையும் தீர்க்கதரிசனத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்றே தெரிகிறது.—ஏசாயா 9:1, 2.