அடிக்குறிப்பு
a வளர்ந்துவரும் கரு குறைபாடுள்ளதாகத் தெரிந்தால் அல்லது ஏராளமான கருக்கள் கருப்பையில் வளரத்தொடங்கியிருந்தால் என்ன செய்வது? கர்ப்பத்தைக் கலைப்பது கருக்கொலையாக இருக்கும். IVF முறையில் இரட்டைக் குழந்தைகள், மூன்று குழந்தைகள், ஏன் சிலநேரம் அதற்கும் அதிகமான குழந்தைகள் கர்ப்பத்தில் உருவாவது சகஜம்; இதனால் குறைப்பிரசவம், தாய்க்கு அளவுக்கதிகமான இரத்தப்போக்கு போன்ற ஆபத்துகள் நேரிடலாம். ஒருவேளை அந்தத் தாயின் கருப்பையில் பல கருக்கள் வளரத்தொடங்கியிருந்தால், ஒன்றையோ அதற்கும் அதிகமானவற்றையோ அழித்துவிடும்படி மற்றவர்கள் அவளை வற்புறுத்தலாம். ஆனால், அப்படிச் செய்வது கொலைக்குச் சமம்.—யாத். 21:22, 23; சங். 139:16.