அடிக்குறிப்பு
e பாரா 14: இது மத்தேயு 13:42 பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலில் ஏற்பட்டுள்ள ஒரு மாற்றம். “கடவுளுடைய அரசாங்கத்தின் பிள்ளைகள்,” போலி கிறிஸ்தவர்களைத் தோலுரித்துக் காட்டியதால், அதாவது அவர்கள் “பொல்லாதவனின் பிள்ளைகள்” என்பதைக் காட்டியதால், அவர்கள் பல பத்தாண்டுகளாக ‘அழுது அங்கலாய்த்து’ புலம்பியதாக நம் பிரசுரங்கள் முன்பு குறிப்பிட்டன. (மத். 13:38) ஆனால், அழுது அங்கலாய்ப்பது, அதாவது பற்களைக் கடிப்பது பற்றி பைபிள் சொல்லும்போது அதை அழிவோடு சம்பந்தப்படுத்தியே பேசுகிறது.—சங். 112:10.