அடிக்குறிப்பு
f பாரா 16: “ஞானவான்கள் [பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள்] ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போல . . . பிரகாசிப்பார்கள்” என்று தானியேல் 12:3 சொல்கிறது. அவர்கள் பூமியில் இருக்கும்போது பிரசங்க வேலையில் ஈடுபடுவதன் மூலம் இப்படிப் பிரகாசிக்கிறார்கள். இருந்தாலும், பரலோக அரசாங்கத்தில் சூரியனைப் போல பிரகாசிப்பதைப் பற்றியே மத்தேயு 13:43 சொல்கிறது. இரண்டு வசனங்களும் ஒரே விஷயத்தைத்தான், அதாவது, பிரசங்க வேலையைத்தான், குறிக்கிறதென முன்பு நினைத்தோம்.