அடிக்குறிப்பு
a “இதோ, மணமகன் வருகிறார்!” (வசனம் 6) என்ற சத்தம் கேட்ட சமயத்திற்கும் மணமகன் நிஜமாகவே வந்ததற்கும் (வசனம் 10) இடையில் ஒரு காலப்பகுதி இருக்கிறது என்று இந்த உதாரணத்தில் இருந்து தெரிந்துகொள்கிறோம். கடைசி நாட்கள் ஆரம்பித்த சமயத்தில் இருந்து, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் இயேசுவின் பிரசன்னத்தின் அடையாளத்தை தெளிவாக பார்க்கிறார்கள். அதனால், இயேசு இப்போது பரலோகத்தில் ராஜாவாக ஆட்சி செய்கிறார் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் இந்த கடைசி நாட்களில் விழிப்பாக இருப்பது போல் இயேசு ‘வரும்’ வரை தொடர்ந்து விழிப்பாக இருக்க வேண்டும்.