அடிக்குறிப்பு
a சீடர்களிடம் கடைசி நாட்களை பற்றிய அடையாளங்களை சொன்னபோது இயேசு நிறைய உதாரணங்களை பயன்படுத்தினார். முதலில், யெகோவாவின் மக்களை வழிநடத்தும் ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ பற்றிய உதாரணத்தை சொன்னார். அதாவது, பரலோக நம்பிக்கையுள்ள ஒரு சிறு தொகுதியை பற்றிய உதாரணத்தை சொன்னார். (மத். 24:45-47) பிறகு, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் பொருந்தும் உதாரணங்களை சொன்னார். (மத். 25:1-30) கடைசியாக, கிறிஸ்துவின் சகோதரர்களுக்கு உதவி செய்யும் பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்களை பற்றிய உதாரணத்தை சொன்னார். (மத். 25:31-46) அதேபோல் எசேக்கியேலின் தீர்க்கதரிசனம் நிறைவேற ஆரம்பித்த சமயத்தில் அந்த தீர்க்கதரிசனம் முதலில் பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு பொருந்தியது. பத்து கோத்திர வடக்கு ராஜ்யம் பொதுவாக பூமியில் வாழும் நம்பிக்கையுள்ள மக்களை குறிக்கவில்லை. என்றாலும், அந்த இரண்டு ராஜ்யங்கள் ஒன்றாக சேர்ந்து இருந்ததுபோல் இன்று பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் பூமியில் வாழும் நம்பிக்கையுள்ளவர்களும் ஒன்றுசேர்ந்து யெகோவாவை வணங்குவார்கள் என்பதை இந்த தீர்க்கதரிசனம் விளக்கியது.