அடிக்குறிப்பு
a சில பைபிள் மொழிபெயர்ப்புகளில் யோவான் 7:53–8:11 வசனங்கள் இருக்கின்றன. ஆனால், பைபிள் முதன்முதலில் எழுதப்பட்டபோது இவை இல்லை. சிலர் இந்த வசனங்களைப் படித்துவிட்டு, தவறான முடிவுக்கு வந்திருக்கிறார்கள். அதாவது, எந்தப் பாவமும் செய்யாத ஒருவரால்தான் மணத்துணைக்குத் துரோகம் செய்தவரைத் தண்டிக்க முடியும் என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஆனால், இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்த சட்டம் இப்படிச் சொன்னது: “ஒருவன் இன்னொருவனுடைய மனைவியோடு உறவுகொள்ளும்போது கையும் களவுமாகப் பிடிபட்டால், அவனும் அவளும் கொல்லப்பட வேண்டும்.”—உபா. 22:22.