அடிக்குறிப்பு
a “இன்று” என்று சொன்னபோது, தான் சாகப்போவதையும், அதேநாளில் அல்லது 24 மணிநேரத்துக்குள், தான் பூஞ்சோலையில் இருக்கப்போவதாகவும் இயேசு சொன்னதாக அறிஞர்கள் நிறைய பேர் நம்புகிறார்கள் என்று மார்வின் பேட் என்ற பேராசிரியர் சொல்கிறார். ஆனால், இந்தக் கருத்து பைபிளில் இருக்கிற மற்ற விஷயங்களோடு ஒத்துப்போவதில்லை என்றும் அவர் சொல்கிறார். உதாரணத்துக்கு, இயேசு இறந்த பிறகு அவர் கல்லறையில் இருந்ததாகவும், பிற்பாடுதான் அவர் பரலோகத்துக்குப் போனதாகவும் பைபிள் சொல்கிறது.—மத். 12:40; அப். 2:31; ரோ. 10:7.