அடிக்குறிப்பு
f பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட சில அமைப்புகள், ‘இளைஞர்கள் முகாம்களை’ (youth camps) நடத்துகின்றன. அல்லது, பொழுதுபோக்குக்காக சில கட்டிடங்களைக் கட்டுகின்றன; வேறுசில ஏற்பாடுகளையும் செய்கின்றன. இதுபோன்ற அமைப்புகளிலும் நாம் உறுப்பினர்களாக இருக்க முடியாது. உதாரணத்துக்கு, YMCA என்ற அமைப்பில் நாம் உறுப்பினராக இருக்க முடியுமா? அதைப் பற்றித் தெரிந்துகொள்ள, ஜனவரி 1, 1979 ஆங்கில காவற்கோபுரத்தில் வெளிவந்த “வாசகர் கேட்கும் கேள்விகள்” என்ற பகுதியைப் பாருங்கள். YWCA என்ற அமைப்பில் உறுப்பினராக இருக்கும் விஷயத்துக்கும் இது பொருந்துகிறது. இதுபோன்ற அமைப்புகளின் உள்ளூர் நிறுவனங்கள் தங்களுடைய செயல்பாடுகளுக்கும் மதத்துக்கும் அவ்வளவாக சம்பந்தம் இல்லை என்று சொல்லிக்கொள்ளலாம். இருந்தாலும், அவற்றின் ஆரம்பமும் குறிக்கோளும் பொய் மதங்களோடு சம்பந்தப்பட்டவைதான்!