அடிக்குறிப்பு
a நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் மற்றவர்களைப் புண்படுத்துகிற மாதிரி ஏதாவது சொல்லிவிடலாம், அல்லது செய்துவிடலாம். அப்போது, நாம் எப்படி நடந்துகொள்கிறோம்? அவர்களிடம் சமாதானமாக முயற்சி செய்கிறோமா? அவர்களிடம் மன்னிப்பு கேட்கிறோமா? ‘அவங்க தப்பா நினைச்சுட்டா நான் என்ன செய்ய முடியும்? அது அவங்களோட பிரச்சன’ என்று நினைக்கிறோமா? ஒருவேளை, மற்றவர்கள் என்ன சொன்னாலும், செய்தாலும் நாம் தொட்டாச்சிணுங்கி மாதிரி இருக்கிறோமா? ‘என்னுடைய சுபாவமே அப்படித்தான்’ என்று நினைத்துக்கொள்கிறோமா? இல்லையென்றால், ‘இது என்கிட்ட இருக்கிற ஒரு பிரச்சன. இத நான் சரி செய்யணும்’ என்று யோசிக்கிறோமா?