அடிக்குறிப்பு
a ஒரு குடும்பம் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால், குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பைச் சரியாகச் செய்ய வேண்டும். ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும். உதாரணத்துக்கு, அப்பா குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். அம்மா அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். பிள்ளைகள், அப்பா அம்மாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். யெகோவாவுக்கும் ஒரு குடும்பம் இருக்கிறது. அந்தக் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரிடமிருந்தும் அவர் சில விஷயங்களை எதிர்பார்க்கிறார். அவர் எதிர்பார்க்கிறபடி நாம் நடந்துகொண்டால் என்றென்றைக்கும் அவருடைய குடும்பத்தில் ஒருவராக இருக்க முடியும்.