அடிக்குறிப்பு
b படவிளக்கம்: தன்னுடைய சாயலில் மனிதர்களை யெகோவா படைத்திருப்பதால் ஒரு கணவராலும் மனைவியாலும் ஒருவருக்கொருவர் அன்பையும் கரிசனையையும் காட்ட முடிகிறது. தங்களுடைய பிள்ளைகளிடமும் அந்தக் குணங்களைக் காட்ட முடிகிறது. அந்தத் தம்பதி யெகோவாவை நேசிக்கிறார்கள். அதனால், பிள்ளைகள் யெகோவாவை நேசிக்கவும் அவருக்குச் சேவை செய்யவும் கற்றுக்கொடுக்கிறார்கள். பிள்ளைகளைப் பெற்றெடுக்கும் திறனை யெகோவா கொடுத்ததால்தான், அவர்களால் இப்படியெல்லாம் செய்ய முடிகிறது. யெகோவா ஏன் இயேசுவை மீட்புவிலையாகக் கொடுத்தார் என்பதைப் பற்றி விளக்குகிற வீடியோவைக் காட்டுகிறார்கள். வரப்போகிற பூஞ்சோலையைப் பற்றிச் சொல்லிக்கொடுக்கிறார்கள். அந்தச் சமயத்தில், பூமியையும் மிருகங்களையும் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் சொல்லிக்கொடுக்கிறார்கள்.