அடிக்குறிப்பு
a நாம் எல்லாருமே யெகோவாமேல் ரொம்ப அன்பு வைத்திருக்கிறோம். அவருக்கு நிறைய சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அதனால், ஊழியத்தை நிறைய செய்ய வேண்டும் என்று நினைக்கலாம். சபையில் இன்னும் நிறைய பொறுப்புகளை எடுத்துச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளுடன் உழைக்கலாம். ஆனால், எவ்வளவுதான் முயற்சி எடுத்தும் நாம் நினைக்கும் குறிக்கோள்களை அடைய முடியாவிட்டால் என்ன செய்வது? நம்முடைய சந்தோஷத்தை இழந்துவிடாமல் யெகோவாவுக்குச் சுறுசுறுப்பாகச் சேவை செய்வதற்கு என்ன செய்யலாம்? தாலந்து பற்றி இயேசு சொன்ன உவமையில் இதற்கான பதில்களைத் தெரிந்துகொள்ளலாம்.