அடிக்குறிப்பு
a தூய வணக்கத்தைத் திரும்பவும் ஆரம்பிப்பதில் யெகோவாவின் மக்களுக்குச் சில சவால்கள் இருந்தன. அதனால், அவர்களைப் பலப்படுத்துவதற்காக சகரியா தீர்க்கதரிசிக்கு யெகோவா சிலிர்க்க வைக்கிற சில தரிசனங்களைக் காட்டினார். சவால்களைச் சமாளிக்க சகரியாவுக்கும் அந்த மக்களுக்கும் இவை உதவின. சவால்கள் மத்தியில் யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்ய அந்தத் தரிசனங்கள் நமக்கும் உதவும். சகரியா பார்த்த தரிசனங்களில் ஒன்று, குத்துவிளக்கையும் ஒலிவ மரங்களையும் பற்றியது. அந்தத் தரிசனத்திலிருந்து என்ன முக்கியமான பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.