மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு
தென் அமெரிக்காவிலுள்ள அர்ஜன்டினாவில் வசிக்கும் கிராஸியேலா பின்வரும் இந்தக் கடிதத்தை எழுதினார்: “நான் கடந்த 40 வருடங்களாக காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை வாசித்து வருகிறேன். இத்தனை வருட அனுபவத்தில் நான் உறுதியாக சொல்கிறேன், அவை என் தேவையை பூர்த்தி செய்துள்ளன. நான் குழந்தையாக இருந்த சமயத்திலிருந்து, பருவமடைந்து, காதலித்து, திருமணம் செய்து, இப்போது ஆறு பிள்ளைகளை வளர்ப்பது வரை எல்லா சமயங்களிலும் அவை எனக்கு கை கொடுத்திருக்கின்றன.
“இப்போது நான்கு பிள்ளைகள் எங்களோடு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களை வளர்ப்பதிலும் அவை எனக்கும் என் கணவருக்கும் அதிகம் உதவியுள்ளன. என் பிள்ளைகளோடும் அவர்களுடைய ஆசிரியர்களோடும் பேசுவதற்கு இந்தப் பத்திரிகைகள் பேருதவியாக உள்ளன. உடல்நல பிரச்சினைகள் பற்றி டாக்டர்களோடு பேசுகையில் நேராக விழித்தெழு! பத்திரிகையிலிருந்தே வாசித்து காட்டுவேன். ‘கற்பதில் குறைபாடுள்ள பிள்ளைகளுக்கு உதவி’ (பிப்ரவரி 22, 1997) என்ற தொடர் கட்டுரைகள் காரணமாக எங்களுடைய மகள்களில் ஒருத்திக்கு இந்தப் பிரச்சினை இருப்பதை அறிந்தோம்.”
குடும்பங்கள் எதிர்ப்படும் அநேக பிரச்சினைகளை சமாளித்து, சந்தோஷமான வாழ்க்கையை ஒன்றாக அனுபவித்து மகிழ உவாட்ச் டவர் சொஸைட்டியின் பிரசுரங்கள் உதவுகின்றன. உதாரணமாக, குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற 192 பக்க புத்தகம், கணவன், மனைவி, பெற்றோர், பிள்ளைகள், தாத்தா, பாட்டி ஆகிய அனைவருக்கும் உதவியாக இருக்கும். போதனையளிக்கும் அதன் அருமையான அதிகாரங்களுக்கு சில உதாரணங்கள் இதோ: “சிசுப்பருவத்திலிருந்தே உங்கள் பிள்ளையை பயிற்றுவியுங்கள்,” “உங்கள் பருவவயது பிள்ளை செழித்தோங்க உதவிசெய்யுங்கள்,” “உங்கள் குடும்பத்தை தீங்கு விளைவிக்கும் செல்வாக்குகளிலிருந்து பாதுகாத்திடுங்கள்,” “குடும்பத்தை சேதப்படுத்தும் பிரச்சினைகளை நீங்கள் மேற்கொள்ளலாம்.”
குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற 192 பக்க புத்தகத்தைப் பற்றி அதிகம் அறிந்துகொள்ள விரும்புகிறீர்களா? தயவுசெய்து கீழே உள்ள கூப்பனை பூர்த்திசெய்து, அதில் உள்ள விலாசத்திற்கோ பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கோ அனுப்பி வையுங்கள். பிரச்சினைகளை சமாளித்து, குடும்ப வாழ்க்கையை அனுபவித்து மகிழ உதவும் நடைமுறையான ஆலோசனைகளை நீங்கள் பெறுவீர்கள். நாம் குடும்ப வாழ்க்கையை முழுமையாக அனுபவித்து மகிழ வேண்டும் என்பதே நம் சிருஷ்டிகரின் நோக்கமும்கூட.
□ என்னை சந்திப்பதற்கு உங்களுடைய பிரதிநிதிகளில் ஒருவரை அனுப்பி வையுங்கள்.
□ தயவுசெய்து எனக்கு இலவசமாக பைபிளைக் கற்றுக்கொடுங்கள்.
[பக்கம் 32-ன் படம்]
கிராஸியேலாவும் அவருடைய குடும்பமும்