அவருக்காக பலர் துக்கம் கொண்டாடினர்
வாஷிங்டன் டி.ஸி.-யில் உள்ள ஓர் அரசாங்க கட்டிடத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தபோது காயமடைந்ததால் ஜெஸி பார்ன்ஸ் என்ற தலைமை எலக்ட்ரீஷியன் இந்த வருடம் ஜனவரி 12-ல் காலமானார். 1995 முதற்கொண்டு அவர் அங்கே வேலை பார்த்துவந்தார். “எல்லாருக்கும் ஜெஸியை பிடிக்கும்” என மானேஜர் ஒருவர் கூறினார். ஜெஸியைப் பற்றி நிர்வாக உதவியாளர் ஒருவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் அவரை ஒரு தடவை சந்தித்திருந்தால்கூட உங்களால் அவரை மறக்க முடியாது, அப்படிப்பட்ட ஒரு நபர் அவர்.” அவர் மேலும் கூறியதாவது: “அவருடைய மத நம்பிக்கைகளை ஒருநாளும் மற்றவர்கள்மீது அவர் திணித்தது கிடையாது, ஆனால் மற்றவர்கள் அவரை இழிவாக பேசுவதை கேட்டால், அவர்களுடைய பழக்கத்தை மாற்றிக்கொள்ளும்படி சொல்வார்.”
ஜெஸி 1993-ல் ஒரு யெகோவாவின் சாட்சியாக மாறினார். மரிக்கும்போது அவருக்கு 48 வயது. தங்களை சந்திக்கும்படி விதவையான அவரது மனைவி மாரீனை இரண்டு அரசாங்க அதிகாரிகள் அழைத்தனர், மார்ச் 20-ம் தேதி மாரீன் அவர்களை சந்தித்தார். நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டையும் யெகோவாவின் சாட்சிகள்—அந்தப் பெயருக்குப் பின்னுள்ள அமைப்பு என்ற வீடியோ கேஸட்டையும் அவர்கள் இருவருக்கும் தனித்தனியாக கொடுத்தார். அந்த அன்பளிப்பிற்காக அவர்கள் இருவரும் நன்றி தெரிவித்தார்கள். இந்த சந்திப்பை பெரிதும் மதித்ததாக அவர்களில் ஒருவர் கூறினார், ஏனென்றால் சமீபத்தில் அவர் தன்னுடைய தகப்பனை இழந்திருந்தார், அந்த இழப்பை சமாளிப்பது அவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
நீங்களோ உங்களுக்குத் தெரிந்தவரோ நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற 32-பக்க சிற்றேட்டை வாசித்து ஆறுதல் அடையலாம். கீழ்க்காணும் கூப்பனை பூர்த்திசெய்து அதிலுள்ள விலாசத்திற்கு அல்லது இப்பத்திரிகையில் பக்கம் 5-ல் உள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பி கூடுதலான தகவலை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். (g02 11/22)
◻ நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில் என்ற சிற்றேட்டை பற்றிய கூடுதலான எனக்கு அனுப்பவும்.
◻ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்.