“இதை மட்டும் எல்லாரும் படித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!”
இப்படித்தான், யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் என்ற புத்தகத்தைப்பற்றி ஒரு வாசகி எழுதினார். “யெகோவாவுடைய அன்பை இப்போது இன்னும் நன்கு புரிந்திருக்கிறேன், நான் மற்றவர்களிடம் இன்னும் அதிகமாய் அன்பு காட்டப் போகிறேன்” என்றும் அவர் எழுதினார். நன்றி தெரிவிக்கும் விதத்தில் இன்னொரு வாசகி இவ்வாறு எழுதினார்: “இந்தப் புத்தகத்தைப் பக்கத்துக்குப் பக்கம் எந்தளவு ரசித்துப் படித்தேன் என்பதையும் அது எவ்வளவாய் பயன் அளித்தது என்பதையும் விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. . . . எந்தளவு வாசித்தேனோ அந்தளவு அதிகமாய் ஊக்கம் பெற்றேன்.”
யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகத்தின் நான்கு முக்கிய பகுதிகள் கடவுளுடைய பிரதான குணங்களான வல்லமை, நீதி, ஞானம், அன்பு ஆகியவற்றைச் சிந்திக்கின்றன. “இந்தப் புத்தகம், என் பரலோகத் தகப்பனின் அருமையான குணங்களைப் புரிந்துகொள்ள எனக்கு உதவியிருக்கிறது. என் வாழ்க்கையில் அவருடைய பரிசுத்த ஆவி செயல்பட அனுமதித்தால் அவருடைய குணங்களை நான்கூட வெளிக்காட்ட முடியும் என்பதைப் புரிந்துகொள்ளவும் இது எனக்கு உதவியிருக்கிறது” என ஒரு வாசகி விளக்கமாய் எழுதினார்.
“‘மன்னிக்க தயாராயிருக்கிற’ கடவுள்” என்ற தலைப்பிலுள்ள 26-ஆம் அதிகாரத்தைப் படித்த பிறகு போலந்து நாட்டைச் சேர்ந்த யோஹான்னா என்ற இளம் பெண் இவ்வாறு சொன்னாள்: “எனக்கு இந்தப் புத்தகத்தில் உள்ள குறிப்புகள் மதிப்புமிக்க பொக்கிஷமாய் இருக்கின்றன; இந்தப் பொக்கிஷத்தைக் கண்டுபிடித்தது, என் வாழ்க்கைக்கு மிக அவசியமானதாய் நிரூபித்திருக்கிறது.”
320 பக்கங்களை உடைய இந்தப் புத்தகத்திலிருந்து பயனுள்ள உதவியையும் ஆறுதலையும் நீங்களும் பெறுவீர்கள் என நாங்கள் நம்புகிறோம். இதுபற்றி கூடுதல் தகவல் பெற விரும்பினால் இங்கே உள்ள கூப்பனைப் பூர்த்தி செய்து 5-ஆம் பக்கத்திலுள்ள பொருத்தமான விலாசத்திற்கு அனுப்பவும்.
□ இங்கே காட்டப்பட்டுள்ள புத்தகத்தைப்பற்றி எந்த நிபந்தனையுமின்றி கூடுதலான தகவல் பெற விரும்புகிறேன்.
□ இலவசமாக பைபிளை கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன். தயவுசெய்து என்னைத் தொடர்புகொள்ளவும்.