உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g17 எண் 5 பக். 14-15
  • கஸக்ஸ்தானைச் சுற்றிப் பார்க்கலாமா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கஸக்ஸ்தானைச் சுற்றிப் பார்க்கலாமா?
  • விழித்தெழு!—2017
விழித்தெழு!—2017
g17 எண் 5 பக். 14-15
அஸ்டானா, கஸக்ஸ்தான்

அஸ்டானா நகரம்

நாடுகளும் மக்களும்

கஸக்ஸ்தானைச் சுற்றிப் பார்க்கலாமா?

கஸக்ஸ்தானின் வரைபடம்

கஸக்ஸ்தானில் மக்கள் நாடோடிகளாக வாழ்ந்தார்கள். இன்றுவரை, சில மேய்ப்பர்கள், தங்கள் ஆடு மாடுகளை பருவகாலத்துக்கு ஏற்ப வெவ்வேறு மேய்ச்சல் நிலங்களுக்குக் கொண்டுபோகிறார்கள். கோடைக் காலத்தில் அவர்கள் குளிர்ச்சியான உயர்ந்த மேய்ச்சல் நிலங்களில் தங்கள் மந்தைகளோடு தங்குகிறார்கள். பனிக்காலம் வரும்போது, கதகதப்பாக இருக்கும் தாழ்வான இடங்களுக்கு தங்கள் மந்தைகளைக் கொண்டு வருகிறார்கள்.

கஸக்ஸ்தானில் வாழும் சிலர், வளர்ச்சியடைந்த நகரங்களில் குடியிருக்கிறார்கள். இருந்தாலும், இவர்களுடைய கலாச்சாரங்கள், உணவு வகைகள், கைவினைப் பொருள்கள் எல்லாம் தங்கள் முன்னோர்கள் நாடோடிகளாக வாழ்ந்ததைக் காட்டுகின்றன. கவிதை, பாட்டு, உள்ளூர் இசைக் கருவிகளை வைத்து இசைக்கப்படும் இசை ஆகியவற்றை மக்கள் இன்றும் ரசிக்கிறார்கள்.

யூர்ட் என்பது நாடோடிகளின் பாரம்பரிய வீடு; இதை இடத்துக்கிடம் மாற்றி அமைத்துக்கொள்ளலாம். இந்த யூர்ட் வீடு, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழும் மனிதனுக்கு அடையாளமாகவும் ஆகிவிட்டது. யூர்ட்டில் இருக்கத்தான் மேய்ப்பர்கள் இப்போதும் விரும்புகிறார்கள். விசேஷ நிகழ்ச்சிகளுக்காக நகரவாசிகள் இதை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். இது, சுற்றுலா பயணிகள் தங்குவதற்கும் வசதியாக இருக்கிறது. இந்த வீட்டின் உட்புற வேலைப்பாடு எல்லாரையும் கவருகிறது. ஏனென்றால், எம்பிராய்டரி, நெசவு, கம்பளம் செய்வது போன்றவற்றில் அங்குள்ள பெண்களுக்கு இருக்கும் பலவிதமான திறமைகளை அவை எடுத்துக்காட்டுகின்றன.

யூர்ட்டிற்குள் ஒரு குடும்பம்

யூர்ட்டின் உட்புறம்

கிராமப்புறங்களில் இருக்கும் குடும்பங்களுக்கு, குதிரைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். கஸக் மொழியில், குதிரை என்பதற்கு குறைந்தபட்சம் 21 வார்த்தைகளாவது பயன்படுத்தப்படுகின்றன; அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. அதோடு, குதிரையின் நிறங்களை விவரிக்க, 30-க்கும் அதிகமான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. நல்ல குதிரை ஒன்று, விலை மதிப்புள்ள பரிசாக இருக்கிறது. கிராமங்களில் வாழும் பையன்கள், தங்கள் சிறு வயதிலிருந்தே குதிரை ஓட்டக் கற்றுக்கொள்கிறார்கள்.

இவர்களுடைய பாரம்பரிய உணவில் எப்போதும் இறைச்சி இருக்கும். பொதுவாக, இவர்களுடைய உணவு காரமாக இருக்காது. குமிஸ் மற்றும் ஷூபட் என்ற பானங்கள், இவர்களுக்குப் பிடித்த பானங்கள்! பெண் குதிரையின் பாலிலிருந்து தயாரிக்கப்படும் குமிஸில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து நிறைய இருக்கிறது. ஒட்டகப் பாலிலிருந்து தயாரிக்கப்படும் ஷூபட் கொஞ்சம் புளிப்பாக இருக்கும்.

அல்மாட்டி என்ற இடத்தில் யெகோவாவின் சாட்சிகளுடைய கிளை அலுவலகம் இருக்கிறது. இதைச் சுற்றி பார்க்க யார் வேண்டுமானாலும் வரலாம்.

பனிச் சிறுத்தை

தந்திரமான பனிச் சிறுத்தை கோடைக் காலத்தில் கஸக்ஸ்தானிலுள்ள மலைப் பகுதிகளில் தங்கும்

உங்களுக்குத் தெரியுமா?

இங்கே, குறைந்தபட்சம் 36 விதமான காட்டு இன துலிப் மலர்கள் பூக்கின்றன. கஸக் மக்களுடைய பாரம்பரிய ஓவியங்களில், இந்த மலரின் வடிவத்தைப் பார்க்கலாம்.

பால்காஷ் ஏரியின் கிழக்குப் பகுதியில், தண்ணீர் உப்பாக இருக்கும்; மேற்குப் பகுதியில் உப்பாக இருக்காது.

பயிற்சிபெற்ற கழுகுகளையும், மற்ற உயிரினங்களைத் தின்று வாழும் பறவைகளையும் வைத்து வேட்டையாடுவது இன்றும் பிரபலமாக இருக்கிறது. தங்களுக்குப் பிடித்த பொன்னாங் கழுகுகளுக்கு இவர்கள் திறமையாகப் பயிற்சி கொடுக்கிறார்கள்.

தலையில் கண் மறைப்பு பொருத்தப்பட்டிருக்கும் ஒரு கழுகு ஒருவருடைய கையில் இருக்கிறது

கழுகுகளின் தலையில் பொருத்தப்பட்டிருக்கும் கண் மறைப்பு, மனிதனைப் பார்த்து பயப்படாமல் இருக்க அவற்றுக்கு உதவுகிறது

  • முக்கிய மொழிகள்: கஸக் மற்றும் ரஷ்ய மொழி

  • ஜனத்தொகை: 1,75,63,000

  • தலைநகரம்: அஸ்டானா

  • சீதோஷ்ணம்: கோடைக் காலத்தில் உஷ்ணமாகவும் வறட்சியாகவும் இருக்கும், பனிக் காலத்தில் குளிராகவும் பனியாகவும் இருக்கும்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்