-
பைபிளை ஏன் படிக்க வேண்டும்?காவற்கோபுரம் (பொது)—2017 | எண் 1
-
-
அட்டைப்படக் கட்டுரை | பைபிளை நன்றாகப் புரிந்துகொள்வது எப்படி?
பைபிளை ஏன் படிக்க வேண்டும்?
“பைபிள புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம்னு நினைச்சேன்.”—ஜூவி
“பைபிள படிக்கிறது சுவாரஸ்யமா இருக்காதுனு நினைச்சேன்.”—குவீனீ
“பைபிள் ரொம்ப பெருசா இருக்குறதுனால, அத படிக்கணுங்குற ஆசையே வரல.”—எசெக்யேல்
இவர்களைப் போலவே நீங்களும் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? அதனால், பைபிளை வாசிக்காமல் இருந்திருக்கிறீர்களா? பைபிளை படிப்பது ரொம்ப கஷ்டம் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். ஆனால், பைபிளை படித்தால் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ முடியும். பைபிளை சுவாரஸ்யமாக படிக்க முடியும். பைபிளை படிப்பதால் நிறைய நன்மைகளும் கிடைக்கும்.
பைபிளை வாசித்ததால், நன்மை அடைந்த சிலர் சொல்வதைப் பாருங்கள்:
சுமார் 20 வயதுள்ள எசெக்யேல் இப்படிச் சொல்கிறார்: “முன்னாடில்லாம், என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமே இல்லனு நினைச்சேன். எங்க போறோம்னு தெரியாம வண்டி ஓட்ற ஒருத்தர மாதிரி இருந்தேன். ஆனா, பைபிள படிச்சதுக்கு அப்புறம் குறிக்கோளோட வாழ ஆரம்பிச்சேன். என் வாழ்க்கைக்கு தேவையான நிறைய நல்ல விஷயங்கள அதுலயிருந்து படிச்சு தெரிஞ்சிக்கிட்டேன்.”
சுமார் 25 வயதுள்ள ஃப்ரீடா இப்படிச் சொல்கிறார்: “முன்னாடில்லாம் எனக்கு ரொம்ப கோவம் வரும். ஆனா, பைபிள் படிக்குறதுனால என் கோவத்த கட்டுப்படுத்த முடியுது. இப்போ எல்லார்கிட்டயும் நல்லா பழகுறேன். அதனால, எனக்கு நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க.”
சுமார் 55 வயதுள்ள யூனிஸ் இப்படிச் சொல்கிறார்: “பைபிள படிக்குறதுனால என்கிட்ட இருக்கிற சில கெட்ட குணங்கள மாத்திக்கிட்டு, ஒரு நல்ல நபரா இருக்க முடியுது.”
இவர்களைப் போலவே லட்சக்கணக்கான மக்களும் உணருகிறார்கள். பைபிளை படித்தால் நீங்களும் சந்தோஷமாக வாழ முடியும். (ஏசாயா 48:17, 18) அதோடு (1) நல்ல தீர்மானங்களை எடுக்க, (2) நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்க, (3) கவலைகளைச் சமாளிக்க, (4) முக்கியமாக, கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள பைபிள் உங்களுக்கு உதவும். கடவுள் சொன்ன விஷயங்கள்தான் பைபிளில் இருக்கின்றன. அதன்படி நடந்தால், நீங்கள் கெட்ட வழியில் போக மாட்டீர்கள். ஏனென்றால், கடவுள் தவறான அறிவுரைகளை ஒருபோதும் கொடுக்கமாட்டார்.
பைபிளை படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு சில விஷயங்களைச் செய்ய வேண்டும். அதைச் செய்வது ரொம்ப சுலபம். அப்படிச் செய்தால் பைபிளை உங்களால் சுவாரஸ்யமாக படிக்க முடியும்.
-
-
பைபிளை படிப்பதற்குமுன் என்ன செய்ய வேண்டும்?காவற்கோபுரம் (பொது)—2017 | எண் 1
-
-
அட்டைப்படக் கட்டுரை | பைபிளை நன்றாகப் புரிந்துகொள்வது எப்படி?
பைபிளை படிப்பதற்குமுன் என்ன செய்ய வேண்டும்?
பைபிளை ஆர்வமாக படிக்கவும் படித்த விஷயங்கள் பிரயோஜனமாக இருக்கவும் என்ன செய்யலாம்? நிறைய பேருக்கு உதவியாக இருந்த ஐந்து விஷயங்களைப் பாருங்கள்.
நல்ல சூழ்நிலையில் படியுங்கள். அமைதியான சூழலில்... நல்ல வெளிச்சத்தில்... காற்றோட்டமான இடத்தில் படியுங்கள். மனதை அலைபாயவிடாமல், படிக்கும் விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். அப்படிச் செய்தால் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்வீர்கள்.
சரியான எண்ணத்தோடு படியுங்கள். பைபிளை நம்முடைய பரலோக தகப்பன் கொடுத்திருக்கிறார். அதன்மூலம் நமக்கு நிறைய சொல்லிக்கொடுக்கிறார். ஒரு சின்ன பிள்ளை தன்னுடைய அப்பா-அம்மாவிடமிருந்து கற்றுக்கொள்ள ஆர்வமாக இருக்கும். அதேபோன்ற ஆர்வம் நமக்கும் இருக்க வேண்டும். பைபிளை பற்றி ஏதாவது தவறான எண்ணம் இருந்தால் அதை ஒதுக்கிவிடுங்கள். சரியான எண்ணத்தோடு பைபிளை படித்தால்தான் கடவுள் சொல்லித்தரும் விஷயங்களைக் கற்றுக்கொள்ள முடியும்.—சங்கீதம் 25:4.
ஜெபம் செய்துவிட்டு படிக்க ஆரம்பியுங்கள். பைபிளை படிக்க கடவுளுடைய உதவி நமக்கு தேவை. ஏனென்றால், அதிலிருப்பது அவருடைய எண்ணங்கள். அவர் தன்னிடம் ‘கேட்கிறவர்களுக்குத் தன்னுடைய சக்தியை கொடுப்பதாக’ வாக்குக் கொடுத்திருக்கிறார். (லூக்கா 11:13) கடவுளுடைய எண்ணங்களைப் புரிந்துகொள்ள அவருடைய சக்தி உங்களுக்கு உதவும். பைபிளை படிக்க படிக்க “கடவுளுடைய ஆழமான காரியங்களை” நன்றாக புரிந்துகொள்ளவும் அந்தச் சக்தி உதவும்.—1 கொரிந்தியர் 2:10.
படிப்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். ஏதோ படித்து முடிக்க வேண்டும் என்பதற்காக படிக்காதீர்கள், படிக்கும் விஷயத்தைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள். பைபிளில் ஒரு நபரைப் பற்றி படிக்கும்போது உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த நபர்கிட்டயிருந்து நான் என்ன நல்ல விஷயத்த கத்துகிட்டேன்? அதை என் வாழ்க்கையில எப்படி கடைப்பிடிக்கலாம்?’
குறிக்கோளோடு படியுங்கள்: படிக்கும் விஷயங்கள் உங்கள் வாழ்க்கைக்கு பிரயோஜனமாக இருக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு படியுங்கள். ‘கடவுள பத்தி நான் இன்னும் நிறைய தெரிஞ்சிக்கணும்’ என்ற எண்ணத்தோடு படியுங்கள். அதோடு, ‘ஒரு நல்ல நபரா இருக்க... ஒரு நல்ல கணவனா இருக்க... ஒரு நல்ல மனைவியா இருக்க... நான் என்ன செய்யணும்’ என்பதை தெரிந்துகொள்ள வேண்டுமென்ற குறிக்கோளோடு படியுங்கள். இந்த விஷயங்களைப் பற்றி பைபிளில் எங்கே சொல்லப்பட்டிருக்கிறது என்று தேர்ந்தெடுத்து அதைப் படியுங்கள்.a
பைபிளை நன்றாக படிக்க, இந்த ஐந்து விஷயங்கள் உங்களுக்கு உதவும். பைபிளை இன்னும் சுவாரஸ்யமாக படிக்க என்ன செய்யலாம் என்பதை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.
a இதைப் பற்றியெல்லாம் பைபிளில் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்றால் யெகோவாவின் சாட்சிகள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.
-
-
பைபிளை சுவாரஸ்யமாக படிக்க என்ன செய்யலாம்?காவற்கோபுரம் (பொது)—2017 | எண் 1
-
-
அட்டைப்படக் கட்டுரை | பைபிளை நன்றாகப் புரிந்துகொள்வது எப்படி?
பைபிளை சுவாரஸ்யமாக படிக்க என்ன செய்யலாம்?
பைபிளை படிப்பது உங்களுக்கு புத்துணர்ச்சியாக இருக்கிறதா? இது பைபிளை நீங்கள் எப்படிப் படிக்கிறீர்கள் என்பதைப் பொருத்துதான் இருக்கிறது. பைபிளை படிக்க வேண்டும் என்ற ஆசையையும் ஆர்வத்தையும் அதிகரிக்க நான்கு விஷயங்களை இப்போது பார்க்கலாம்.
எளிமையான, நம்பகமான மொழிபெயர்ப்பை பயன்படுத்துங்கள். நீங்கள் பயன்படுத்தும் பைபிளில் இருக்கும் வார்த்தைகள் உங்களுக்கு புரியவில்லை என்றால், அதைப் படிப்பது சுவாரஸ்யமாக இருக்காது. அதனால், உங்களுடைய மனதைத் தொடும் எளிமையான பைபிள் மொழிபெயர்ப்பை பயன்படுத்துங்கள். அது நம்பகமான மொழிபெயர்ப்பாக இருக்க வேண்டும்.a
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துங்கள். பைபிள், இன்று புத்தகமாக மட்டுமல்ல டிஜிட்டல் வடிவிலும் கிடைக்கிறது. பைபிளை நீங்கள் ஆன்லைனில் படிக்கலாம் அல்லது கம்ப்யூட்டரில்... டேப்லட்டில்... மொபைலில் டவுன்லோட் செய்து படிக்கலாம். சில அப்ளிகேஷன்களில், ஒரு வசனத்தோடு சம்பந்தப்பட்ட மற்ற வசனங்களையும் பார்க்கலாம். அல்லது, அதே வசனத்தை மற்ற மொழிபெயர்ப்புகளிலும் பார்க்கலாம். சில மொழிகளில் பைபிள் ஆடியோ பதிவிலும் கிடைக்கிறது. படிப்பதைவிட கேட்பது உங்களுக்கு பிடிக்கும் என்றால், ஆடியோ பதிவை பயன்படுத்துங்கள். நிறைய பேர், பயணம் செய்யும்போது அல்லது மற்ற வேலைகளைச் செய்யும்போது ஆடியோ பதிவுகளை கேட்க விரும்புகிறார்கள். உங்களுக்கு பிடித்த விதத்தில் பைபிளை படியுங்கள்.
மற்ற கருவிகளையும் பயன்படுத்துங்கள். பைபிளில் இருக்கும் விஷயங்களைக் கற்றுக்கொள்ள வரைபடங்கள், jw.org வெப்சைட், காவற்கோபுர பத்திரிகை போன்றவை உங்களுக்கு உதவும். வரைபடங்களைப் பயன்படுத்தி பைபிள் பதிவுகளை கற்பனை செய்து பார்க்கும்போது பைபிளை படிப்பது இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும். பைபிளில் உள்ள நிறைய விஷயங்களைப் புரிந்துகொள்ள jw.org வெப்சைட்டில் “பைபிள் போதனைகள்” என்ற தலைப்பில் இருக்கும் கட்டுரைகள் உங்களுக்கு உதவும். அதோடு, காவற்கோபுர பத்திரிகையில் வரும் கட்டுரைகளும் உதவும்.
வித்தியாசமான முறைகளைப் பயன்படுத்துங்கள். பைபிளை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை படிப்பது ஒருவேளை உங்களுக்கு கஷ்டமாக இருக்கலாம். அதனால் உங்களுக்கு சுவாரஸ்யமாக இருக்கும் சில பதிவுகளை முதலில் படிக்க ஆரம்பிக்கலாம். கடவுளுக்கு பிடித்தமாதிரி வாழ்ந்த நபர்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பினால், அவர்களைப் பற்றிய பதிவுகளைப் படிக்கலாம். உதாரணத்துக்கு “பைபிள் காலங்களில் வாழ்ந்தவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள். பைபிள் சம்பவங்களை, கால வரிசைப்படி நீங்கள் படிக்கலாம் அல்லது குறிப்பிட்ட பகுதிகளைத் தேர்ந்தெடுத்து படிக்கலாம். இப்படி வித்தியாசமான விதங்களில் நீங்கள் பைபிளை படிக்கலாம்.
a புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிள் துல்லியமானது... நம்பகமானது... எளிமையானது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். யெகோவாவின் சாட்சிகளால் தயாரிக்கப்பட்ட இந்த பைபிள் 130-க்கும் அதிகமான மொழிகளில் கிடைக்கிறது. நீங்கள் இதை jw.org வெப்சைட்டிலிருந்து டவுன்லோட் செய்யலாம். JW லைப்ரரி அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து அதிலிருந்தும் பைபிளை படிக்கலாம். ஒருவேளை நீங்கள் விரும்பினால், யெகோவாவின் சாட்சிகள் உங்களை சந்தித்து இந்த பைபிளை கொடுப்பார்கள்.
-
-
சந்தோஷமாக வாழ பைபிள் நமக்கு எப்படி உதவும்?காவற்கோபுரம் (பொது)—2017 | எண் 1
-
-
அட்டைப்படக் கட்டுரை | பைபிளை நன்றாகப் புரிந்துகொள்வது எப்படி
சந்தோஷமாக வாழ பைபிள் நமக்கு எப்படி உதவும்?
பைபிள் ஒரு சாதாரண புத்தகம் கிடையாது. அதில் நம்முடைய படைப்பாளர் கொடுத்த ஆலோசனைகள் இருக்கின்றன. (2 தீமோத்தேயு 3:16) நம்முடைய வாழ்க்கையையே மாற்றும் சக்தி பைபிளுக்கு இருக்கிறது. ஏனென்றால், “கடவுளுடைய வார்த்தைக்கு உயிர் இருக்கிறது, வல்லமை இருக்கிறது.” (எபிரெயர் 4:12) சந்தோஷமாக வாழ பைபிள் நமக்கு இரண்டு முக்கியமான விதங்களில் உதவுகிறது: (1) வாழ்க்கைக்கு தேவையான ஆலோசனைகளைத் தருகிறது. (2) கடவுளைப் பற்றியும் அவருடைய வாக்குறுதிகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள உதவுகிறது.—1 தீமோத்தேயு 4:8; யாக்கோபு 4:8.
இப்போதே சந்தோஷமாக வாழ முடியும். வாழ்க்கைக்கு தேவையான ஆலோசனைகள் பைபிளில் இருக்கின்றன. பைபிளை படித்தால்...
எல்லாரோடும் சமாதானமாக இருக்க முடியும். —எபேசியர் 4:31, 32; 5:22, 25, 28, 33.
உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். —சங்கீதம் 37:8; நீதிமொழிகள் 17:22.
ஒழுக்கமாக வாழ முடியும்.—1 கொரிந்தியர் 6:9, 10.
பணக்கஷ்டத்தைச் சமாளிக்க முடியும். —நீதிமொழிகள் 10:4; 28:19; எபேசியர் 4:28.a
ஆசியாவில் இருக்கும் விசென்ட்-ஆனளூ என்ற இளம் தம்பதிக்கு பைபிளில் இருக்கும் ஆலோசனைகள் பிரயோஜனமாக இருந்தது. புதிதாக கல்யாணமான தம்பதிகளுக்கு பொதுவாக ஒருவரைவொருவர் அனுசரித்து போவதும், மனம்விட்டு பேசுவதும் கஷ்டமாக இருக்கும். அதே பிரச்சினை இவர்களுக்கும் இருந்தது. ஆனால், இவர்கள் பைபிளைப் படித்து அதன்படி வாழ்ந்தார்கள். பின்பு என்ன நடந்தது என்று விசென்ட் சொல்கிறார்: “பைபிள வாசிச்சதுனால எங்களுக்குள்ள வர பிரச்சினைய எப்படி அன்பா சரிசெய்றதுனு கத்துக்கிட்டேன். பைபிள் சொல்ற மாதிரி வாழ்றதுனால நாங்க சந்தோஷமா இருக்கோம்.” அவருடைய மனைவி ஆனளூ சொல்கிறார், “கடவுள் பக்தியுள்ள நபர்கள பத்தி பைபிள்ல படிச்சது எங்களுக்கு உதவியா இருந்துச்சு. எங்க திருமண வாழ்க்கைல நாங்க இப்போ சந்தோஷமாவும் திருப்தியாவும் இருக்கோம். எங்களோட லட்சியங்கள நினைச்சும் சந்தோஷப்படுறோம்.”
கடவுளைப் பற்றி தெரிந்துகொள்ள முடியும். பைபிளை படித்ததால் தன்னுடைய திருமண வாழ்க்கையில் மட்டுமல்ல, இன்னும் நிறைய விதங்களிலும் விசென்ட் நன்மை அடைந்திருக்கிறார். அவர் சொல்கிறார்: “பைபிள படிக்கிறதுனால, என் வாழ்க்கைல எப்பவும்விட இப்போ யெகோவாகிட்டb நெருங்கிவர முடிஞ்சிருக்கு.” விசென்ட் சொன்ன விஷயத்திலிருந்து ஒரு முக்கியமான உண்மையைப் புரிந்துகொள்ள முடிகிறது. பைபிளை படித்தால் கடவுளைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு அவரிடம் நெருங்கி வர முடியும். பைபிள், நமக்கு அறிவுரைகளைத் தருவதோடு கடவுளுடைய நண்பராவதற்கும் உதவி செய்கிறது. கடவுள் தரப்போகிற எதிர்காலத்தில் நாம் அனுபவிக்கப்போகும் “உண்மையான வாழ்வை” பற்றியும் சொல்கிறது. (1 தீமோத்தேயு 6:19) இந்த அருமையான விஷயங்கள் வேறு எந்தப் புத்தகத்திலும் இல்லை.
நீங்களும் பைபிளை தவறாமல் படியுங்கள். அப்படிச் செய்தால் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்கள்; கடவுளைப் பற்றியும் தெரிந்துகொள்வீர்கள். பைபிளை படிக்கப் படிக்க உங்களுக்கு நிறைய கேள்விகள் வரலாம். உங்கள் மனதில் கேள்விகள் வரும்போது 2,000 வருஷங்களுக்கு முன்பு வாழ்ந்த எத்தியோப்பிய அதிகாரியின் உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். பைபிளை வாசித்தபோது அவருக்கும் நிறைய கேள்விகள் வந்தது. படிக்கும் விஷயங்களைப் புரிந்துகொண்டாரா என்று இயேசுவின் சீஷராக இருந்த பிலிப்பு அவரிடம் கேட்டபோது, “ஒருவர் கற்றுக்கொடுக்காவிட்டால் எனக்கு எப்படிப் புரியும்?” என்று அவர் சொன்னார்.c பிறகு பிலிப்பு, அவருக்கு பைபிளில் இருக்கும் உண்மைகளைச் சொல்லிக்கொடுத்தார். பிலிப்பு கடவுளுடைய வார்த்தையைப் பற்றி நன்றாக தெரிந்த ஒரு நபராக இருந்தார். (அப்போஸ்தலர் 8:30, 31, 34) நீங்களும் பைபிளை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள விரும்பினால் www.pr418.com வெப்சைட்டில் இருக்கும் “பைபிள் படிப்பு வேண்டும்” என்ற படிவத்தை நிரப்பி அனுப்பலாம். அல்லது இந்தப் பத்திரிகையில் கொடுக்கப்பட்டிருக்கும் விலாசத்துக்கு எழுதி அனுப்பலாம். உங்கள் இடத்துக்கு பக்கத்தில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகளையும் நீங்கள் தொடர்புகொள்ளலாம். அவர்களுடைய கூட்டங்களுக்கும் போகலாம். இன்றே பைபிளை படிக்க ஆரம்பியுங்கள். வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவியுங்கள்.
பைபிள் சொல்கிற எல்லாவற்றையும் நம்ப முடியுமா என்று நீங்கள் யோசித்தால், பைபிளை நம்பலாமா? என்ற வீடியோவைப் பாருங்கள். இதைப் பார்க்க இங்கிருக்கும் QR code-ஐ ஸ்கேன் செய்யுங்கள், அல்லது jw.org-ல் வீடியோ என்ற தலைப்பில் பாருங்கள்
[அடிக்குறிப்புகள்]
a பைபிளில் இன்னும் நிறைய ஆலோசனைகள் இருக்கின்றன. அதைத் தெரிந்துகொள்ள jw.org-ல் பைபிள் போதனைகள் >பைபிள் கேள்விகளுக்கான பதில்கள் என்ற தலைப்பில் பாருங்கள்.
b யெகோவா என்பது பைபிளில் கடவுளுடைய பெயர்.
c இதே பத்திரிகையில் இருக்கும் “பைபிளை சரியாக புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.
-