பாடல் 115
கடவுளின் பொறுமைக்கு நன்றி
1. பூ-மி-யே இன்-று கண்-ணீ-ரி-லே,
துன்-பங்-கள்-தான் க-டல்-போ-லே.
நீர் நி-னைத்-தால் யெ-கோ-வா-வே,
ஓர் நொ-டி-யில் து-டைப்-பீ-ரே.
தீ-மை-கள் யா-வும் நீர் பொ-றுத்-தீர்,
தீ-ய-வர் மா-ற நீர் நி-னைத்-தீர்.
(பல்லவி)
நம்-பிக்-கை-யோ-டு வாழ்-கின்-றோம்,
உம் பொ-று-மைக்-கு நன்-றி சொல்-லி!
2. ஆ-யி-ரம் ஆண்-டு உம் பார்-வை-யில்,
ஓ-டி-வி-டும் ஒ-ரே நா-ளாய்.
உம் ம-கா நாள் யெ-கோ-வா-வே,
கொஞ்-ச-மும் நே-ரம் மா-றா-தே.
பா-வங்-கள் யா-வும் நீர் வெ-றுத்-தீர்,
பா-வி-கள் மா-ற நீர் து-டித்-தீர்.
(பல்லவி)
நம்-பிக்-கை-யோ-டு வாழ்-கின்-றோம்,
உம் பொ-று-மைக்-கு நன்-றி சொல்-லி!
(பாருங்கள்: நெ. 9:30; லூக். 15:7; 2 பே. 3:8, 9.)